Tuesday, May 8, 2012

Facebook முனாழரா .!!

சமீபத்தில் நமது சங்கத்தில் நடந்த " தர் ஹா-  தௌஹீத்" விவாதம், 
இந்தியா- பாக் கிரிக்கெட் மேட்ச்சுக்கு இணையான விறுவிறுப்புடன் இருந்தது . 
மிக உணர்ச்சி கரமாக அதே சமயம் யாரும் சொதப்பி விடக்கூடாதே
என்ற ( nail biting  ) டென்ஷனும் 
கடைசி வரை இருந்தது ...   
இரு அணியினரும் தங்களது கருத்துக்களை
மிக நாகரீகமாகவும் அதேசமயம் தீர்க்கமாகவும் வெளியிட்டனர் ... 

இதற்க்கு காரணம் எல்லோரும் அவரவர் கருத்துக்களை
இறையச்சத்தை முன்னிறுத்தி வெளியிட்டதுதான் ...

இந்த "முனாழரா" தொடர்பான என்னுடைய எண்ணங்கள் :

# அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் .!!
கருத்து வேறுபடுகிற விஷயத்தை கூட மிக நாகரீகமாக அலசுகின்ற ஒரு கண்ணியமான கூட்டமாக அவன் நம்மை ஆக்கி இருக்கிறான். 

# சகோதரர் சைனுதீன், " மதத்தை பற்றி விவாதித்தால் பகை வரும்"
அதனால் தவிர்ப்போம் என்று கூறுகிறார். 
அப்போ,, முகப்புத்தகம் கேடுகெட்ட அரசியலை அலசுவதற்கும் , நாணங்கெட்ட நாட்டு நடப்புகளை சொல்லி நகைப்பதற்க்கும் ,
தின்று விட்ட பிரியாணியை புகைப்படம் எடுத்து போடுவதற்கும் தானா ..?
( அபூ பைசல் பாய் மன்னிக்கவும் )
இல்லை .... இது போன்ற உபயோகமான இம்மை மறுமை வாழ்க்கைக்கு பயன் தரக்கூடிய ஆரோக்கியமான விவாதங்கள் நடக்கும் அரிதான தருணங்களில் தான் நாம் முகப்புத்தகத்தை வியக்கிறேன். 
அதனால்...
விஷயம் தெரிந்தவர்கள் விவாதியுங்கள் ,
தெரியாதவர்கள் தெரிந்து கொள்கிறோம்...

இறைநேசர்கள் அணி :
முகப்புத்தகத்தில் இறைநேசர்கள் அணி கொஞ்சம்
மைனாரிட்டி யாக தான் இருக்கிறார்கள்...
அவர்கள் ( குறிப்பாக அபு ஹாஷிமா அண்ணன்) சொல்லவருவது,

"நாம் கடந்து வந்த பாதையை நமது வரலாற்றை
நமக்கு இஸ்லாத்தை அறிமுகப்படுத்தி நரகத்தின் விளிம்பில் இருந்த நம்மை அதிலிருந்து காப்பாற்றிய அதற்காக பாடுபட்ட தியாகம் செய்த
இஸ்லாமிய பிரச்சாரகர்கள் ( Dha'ee  ) மற்றும்
அவர்களது வரலாறுகளை பற்றி அடுத்த தலைமுறையினருக்கு நினைவூட்டுவது முக்கியம்".
சுருக்கமாக சொன்னால்
நாம் நம்முடைய வேர்களை அறிந்தால் தான்
புதிய கிளைகளை பரப்பி வளர முடியும்.
கடந்து வந்த பாதையை அறிந்தால் தான்
புதிய பாதையை அமைக்க  முடியும். 

இந்த வரலாறுகளையெல்லாம் மறந்ததால் தான்,
இப்போது நாம் நம்முடைய அடையாளங்களை தொலைத்து நிற்கிறோம்.  அந்த இறைநேசர்கள் எல்லாம் வாழ்ந்த காலத்தில்
ஒன்று பட்ட சமுதாயமாக இருந்தோம் நாம் ,, 
அனால் இன்று ..?,,
எல்லோருக்கும் விரல் நுனியில்
குர்ஆன் ,புகாரி, திர்மிதி
எல்லாம் கிடைக்கின்ற இந்த (enlightened period) காலகட்டத்தில்,
தெருவுக்கு ஒரு இயக்கம் என்று நிற்கிறோம்.
இதற்கு காரணம் என்ன ?
நம் முன்னோர்கள் சொல்லித்தந்த மார்க்க நெறிகளை
ஆய்வு என்ற பெயரில் கிண்டல் கேலி செய்வதும்
மரியாதை குறைவாக கையாள்வதும் தான் காரணம்""
என்பது சு .ஜ தரப்பு வாதம்.

இந்த கருத்து எனக்கு முற்றிலும் ஏற்புடையதே ..

வரலாறு முக்கியம் தான் ..
அதே சமயம் ...
அந்த வரலாற்று சுவடுகளில் எல்லாம் ஏகத்துவத்துக்கு வேட்டு வைக்கும் காரியங்கள் நடக்கின்றனவே ..?
தற்போதைய கூகிள் காலத்தில் பேஸ்புக்கிலும்,, யூ ட்யுபிலும்,, இந்த அனாச்சாரங்கள் பற்றிய பதிவுகள் கொட்டி கிடக்கின்றனவே ....
என்ன ? நீங்க பார்த்ததே இல்லையா ..? 

என்ன ..?
அப்படியான எதுவும் நடக்க வில்லை என்கிறீர்களா ..?
அல்லது,,, அவையெல்லாம் நடக்கிறது ஆனால்
அவை மார்கத்துக்கு உட்பட்டது தான் என்கிறீர்களா...?
அல்லது ... எவனோ முட்டாள் செய்கிறான்
அது பற்றி எனக்கு கவலை இல்லை ..
அப்படியான காரியங்களில் நான் ஈடு படுவதில்லை என்கிறீர்களா ..? 
அல்லது ...
வரலாறு சொல்வதோடு என் வேலை முடிஞ்சு போச்சு ...
என்று சொல்கிறீர்களா ..? 
அவற்றை கண்டித்து இது வரை ஒரு வார்த்தையாவது
எழுதி இருக்கிறீர்களா..?
( எனக்கு தெரிந்து இது வரை இல்லை )

உங்கள் எழுத்துக்களில் ஒரு வீச்சு இருக்கிறது ...
அல்லாஹ் உங்களுக்கு அற்புதமாக எழுதும் ஆற்றலை அளித்திருக்கிறான் ...
இது போன்ற தர்ஹா அனாச்சாரங்களையும் ,,, மூட பழக்கங்களையும்
உங்கள் கூரிய எழுத்துக்களை கொண்டு கண்டித்து எழுதுங்கள் ...
அல்லாஹ் உங்களுக்கு மென்மேலும்
ஆயுளையும் ஆரோக்கியத்தையும் விசலமாக்கட்டும் ...


இனி தௌஹீத் அணிக்கு வருவோம் ,,

""சமுதாயத்தில் தவறுகளை சுட்டிக்காட்டும் போது சிலர் ஏற்றுக்கொள்வார்கள் சிலர் மறுப்பார்கள்
அப்போது பிளவு வரத்தான் செய்யும்.
இதை சொன்னா அவன் கோபப்படுவானே ...?
மனசு நோகுமே என்றெல்லாம் கவலைப்பட்டால்
நன்மையை ஏவி தீமையை தடுக்கும் பணியை செய்ய முடியாது ""....
இது தௌஹீத் அணியின் வாதம் ( சுருக்கமாக ! )

ஆனால் இங்கு கவனிக்க வேண்டிய விஷயம்
பிளவு என்பது தௌஹீத் வாதிகளுக்கும் தர்ஹா வாதிகளுக்கும்
இடையில் உள்ள பிளவு அல்ல..
'ஏக' இறை வணக்கத்தை பிரச்சாரம்
செய்தவர்களுக்கு ள்ளேயே
'ஏக'ப்பட்ட பிளவுகள்.
இஸ்லாத்தின் ஒவ்வொரு அம்சத்தையும்
'ஆய்வு' செய்து, 'தூய' வழியில் பின்பற்றும்
பிரிவினரிடையே ஒருவருக்கொருவர்
மிக மோசமாக திட்டிக்கொள்ளும் அளவுக்கு மோதல்கள் ..
போலீஸ் ஸ்டேஷன் களில் புகார்கள்...
ஏன்..?

காரணங்கள் :( எனக்கு தெரிந்த வரையில் )

1) பணம் .
2) அதிகாரப்போட்டி.
3) தொண்டர்களின் பக்குவமின்மை.

தௌஹீத் வாதிகள் சொல்லவேண்டிய விஷயத்தை
பக்குவமா சொல்லியிருந்தா
விஷயம் என்னிக்கோ முடிஞ்சு போயிருக்கும் ...
( சீக்கிரம் முடியக்கூடாது ..
ஏன்னா பிசினெஸ் போயிரும் என்ற எண்ணமோ ..?)

இப்பொழுதும் கூட தௌஹீத் வாதிகளில் சில பேர் எழுதும்
( தத ஜ - இ த ஜ - சண்டைகள் ) பின்னூட்டங்கள்
ரொம்ப அநாகரீகமாகவும் முகம் சுழிக்க வைக்கிறமாதிரியும் இருக்கின்றன ... 
அப்போ தூய நபி வழி எங்க இருக்கு ..?

அதே போல,,
நீ தௌஹீத் வாதி இல்லையா, அப்போ நீ தர்ஹா அணி யை சேர்ந்தவன் ...
நீ கப்ரு வணங்கி .. நீ நரக வாதி ...
என்ற வார்த்தைகளை உடனடியாக அவிழ்த்து விடுகின்றனர் ....
இதுக்கு பேரு ஜார்ஜ் புஸ் டெக்னிக் ...
"நீ எங்களுக்கு ( அமெரிக்கா வுக்கு ) சப்போர்ட் பண்ணு ...
இல்லையா ... அப்போ நீ எதிரியை சேர்ந்தவன் " 
"There are two choices, be on our side, or you will considered as terrorists' side"

தௌஹீத் வாதிகள் இந்த அணுகுமுறையை கைவிட்டால் நலம் .

மாற்று மதத்தினரிடையே இஸ்லாத்தை கூறும் பிரச்சாரகர்களுக்கு
அவர்களுடைய பேச்சு, அணுகுமுறை எப்படி இருக்க வேண்டும்
என்று தனி கவனம் செலுத்துகிறோம்.
அதே போல் நம் சகோதரர்களுடன் பேசும்போதும் அதே கவனத்துடன் அதே அக்கறையுடன், கேலி கிண்டல் தவிர்த்து, நல்ல வார்த்தை கொண்டு
Da'waa செய்யுங்கள் ..


எனவே ...
கருத்துக்களை பரிமாறிக்கொள்வோம்
தெரிந்தவர்கள் தெரிந்தவற்றை தெரிவியுங்கள் ..
தெரியாதவர்கள் தெரியாததை தெரிந்து கொள்கிறோம் ...
சொல்லவேண்டியதை நல்ல வார்த்தைகளை கொண்டு சொல்லுங்கள் ...

அல்லாஹ் நம் அனைவருக்கும் கிருபை செய்யட்டும் ..!!!






2 comments:

  1. என்னுடைய எண்ணங்களை இந்த ஆக்கம் பிரதிபலித்திருக்கிறது.... (திங்காத முழு பிரியாணியை கூட போட்டிருந்தேனே) அதனால் தான் இன்று சையது அலி கப்று வணங்கிகள் என்று சொன்னதற்கு அதை தவிர்க்கும்படி சொல்லி யிருந்தேன் மற்றவர்களை குறிப்பாக முஸ்லிம்களை இப்படி விமர்சிப்பதில் எனக்கு உடன்பாடில்லை... முஸ்லிம்களை சகோதரர்களாக பாவிப்பவர்களையே நானும் மதிப்பேன்... அவர்களுக்கு பட்டப்பெயர் கொடுத்து அழைப்பவர்களுடன் பேச கூட நான் இஷ்டப்படுவதில்லை....

    ReplyDelete
  2. .
    நன்றி அபு பைசல் ..
    தங்கள் வருகைக்கும் , கருத்துக்கும் ...

    # அது சரி ... ஏன் (போட்டோவுல) தலைல கையை வெச்சிட்டு இருக்கீங்க ..?
    # என் பதிவு என்ன அவ்வளவு மோசமாவா இருக்கு ..?

    ReplyDelete