Saturday, July 9, 2011

மூடு விழா ...


Blog ஆரம்பிச்சு முதல் முதலா ஒரு நல்ல விஷயம் எழுதலாம்னு நினைச்சா... ஒரு மூடு விழா news  தான் கிடைச்சுது...

பத்திரிக்கை உலகின் ஜாம்பவான் ருப்பர்ட் முர்டோக் கிற்கு சொந்தமான
"News of the World  பத்திரிகை நேற்றுடன் (10 /6/2011 ) மூடப்பட்டது..

168 ஆண்டுகள் பழமையான இந்த பத்திரிக்கை யின் நிருபர்கள் தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் மாட்டியுள்ளனர்.

நேற்று கடைசி பதிப்பு வெளியாகிறது என்பதால், பத்திரிகை விற்கும் கடைகள், கூடுதல் பிரதிகளைக் கேட்டிருந்தன. மேலும், அப்பத்திரிகையில் மிக அதிகளவில், அறக்கட்டளைகளின் விளம்பரங்கள் இடம் பெற்றிருந்தன. அதோடு, இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க கடைசிப் பதிப்பின் லாபம் அனைத்தும் அறக்கட்டளைகளுக்கு வழங்கப்படும்' எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.




"நாம் நமது பாதையில் இருந்து தவறி விட்டோம். தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்பட்டதற்கு பத்திரிகை வருந்துகிறது. அந்தத் தவறான செயலுக்கும், அதனால் பாதிக்கப்பட்டோருக்கு விளைந்த வேதனைக்கும் நியாயம் கற்பிக்க விரும்பவில்லை. வரலாற்றில் ஒரு பெரிய கறையைத் தவிர வேறு ஒன்றையும் விட்டுச் செல்லவும் இல்லை'"  என்று வாசகர்களிடம் மன்னிப்பு கேட்டது. 




ரூபர்ட் முர்டோக் மற்றும் CEO ரெபெக்கா ப்ரூக்ஸ்
-------------------------------------------------------------------------------------


சரி .. இப்போ ஒரு முக்கியமான விஷயத்துக்கு வருவோம்.
அமெரிக்காவில் பிரபலமான கிறிஸ்தவ போதகர்  ஹரோல்ட் கேம்பிங் (Harold Camping ), சில மாதங்களுக்கு முன், உலகம் 21 May 2011 அன்று அழியப்போவதாக அறிவித்து பெரிய சர்ச்சையை கிளப்பினார்.
அவர் இப்போது கூறுகிறார் நான் கூறியது    "End of world " அல்ல ...நான் சொன்னது " End of the News of the World ".  அதாவது நியூஸ் ஆஃப் தி வேர்ல்டு பத்திரிக்கை முடியப்போவதை தான் அவர் சொன்னாராம் ....  நாமெல்லாம் அவரை தப்பா புரிஞ்சிக்கிட்டோமாம்...

Harold Camping 

No comments:

Post a Comment